ஜெயலலிதா மட்டுமே பொதுச்செயலாளர்... டிடிவி தினகரனை ஏற்கவே மாட்டோம்- ஓபிஎஸ்
ஜெயலலிதாவைத் தவிர அதிமுக பொதுச்செயலாளராக அந்த இருக்கையில் அமர யாருக்கும் தகுதியில்லை என்று ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தாலும் வேறொருவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்தான் பொதுச்செயலாளர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா நீக்கியவர்களை துணைப் பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை சென்னை ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் கொண்டாடினர். நலத்திட்ட உதவிகளையும் பேசினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறினார். 122 எம்எல்ஏக்கள் மட்டுமே அவர்கள் பக்கம் இருக்கின்றனர். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தாலும் தேர்தல் நடத்தி வேறொருவரை தேர்வு செய்யும் வரை அவர் மட்டுமே பொதுச்செயலாளர். அவருடைய இருக்கையில் அமர யாருக்குமே தகுதியில்லை என்று கூறினார்.
டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், கட்சியில் ஜெயலலிதாவினால் நீக்கப்பட்ட ஒருவரை நாங்கள் துணைப்பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம். கட்சிலேயே இல்லாத ஒருவர் எப்படி எங்களுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றார்.
நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் தலைமை அலுவலகம் தானாக தங்களைத் தேடி வரும் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications