ஆர்.கே.நகரில் பட்டய கிளப்பும் அதிமுக "தீம்" சாங்... ராப் ஸ்டைலுக்கு மாறிய ஐடி விங்

ஆர்.கே.நகரில் ராப் ஸ்டைலில் உருவாக்கிய தீம் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்காக அதிமுக சார்பில் தீம் சாங் ஒன்று ராப் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ADMK's theme song goes viral in RK Nagar

பொதுவாக அதிமுக பிரசாரக் கூட்டங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின்
மக்கள் நலத்திட்டங்களை குறிப்பிடும் வரிகள் கொண்ட கானா பாடல்கள் காதை கிழிக்கும். ஆனால் இந்த முறை அதிமுக ஐடி விங் வித்தியாசமாக சிந்தித்துள்ளது.

ராப் ஸ்டைலில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளது. ஆல் தி சென்னை மக்களுக்கு திஸ் இஸ் அவர் தீம் சாங் ஃபார் அஇஅதிமுக என தொடங்கும் பாடலில் பெண்களின் குத்தாட்டம், அதிமுக அணிகள் இணைப்பு, இரட்டை இலை மீட்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா பேச்சு ஆகியன இடம்பெற்றுள்ளது.

இது ஆர்.கே.நகர் முழுவதும் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+