பொதுச்செயலர் பதவியை உடனே ஏற்க வேண்டாம்... சசிகலாவுக்கு சீனியர்கள் திடீர் அட்வைஸ்
சென்னையில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த நிலையில் பொதுச்செயலர் பதவியை உடனே ஏற்க வேண்டாம் என சசிகலாவுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனராம்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியை உடனே ஏற்க வேண்டாம் என சசிகலாவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலர் பதவி யாருக்கு என முடிவு செய்யப்பட உள்ளது.

சசிகலாதான் பொதுச்செயலராக வேண்டும் என மன்னார்குடி கோஷ்டி மல்லுக்கட்டுகிறது. மத்திய அரசோ இதை விரும்பவில்லை. சசிகலாவும் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பால் தயங்குகிறார்.
இந்த நிலையில் இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த சில தலைவர்கள் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இச்சந்திப்புகளின் போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; மத்திய அரசும் நெருக்கடி தருகிறது; ஆகையால் உடனே நீங்கள் பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டாமே; உரிய காலம் வரும்போது ஏற்கலாம் என அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
ஆகையால் பொதுக்குழுவில் தற்காலிக ஏற்பாடாக வேறு ஒருவரை பொதுச்செயலராக்குவோம் அல்லது நீங்கள்தான் பொதுச்செயலராக வேண்டும் என ஒரு தீர்மானம் மட்டும் போடுவோம் எனவும் யோசனையை முன்வைத்தாராம். சசிகலாவுக்கு மிக நெருக்கமான சீனியர் அமைச்சர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications