வைகோவுக்குக் கிடைத்த மாபெரும் "வெற்றி".. !
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும்.
மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே உறுதிபட மறுக்கவில்லை.

மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத் தொடங்கினர். அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர் விஜயகாந்த்தை இழுத்தபோதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள கேம் பிளான் என்ற கூற்று வலுப்பட்டது.
இப்போதுதான் சற்று வெளிப்படையாக ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தார் வைகோ. அப்படியும் கூட அவர் மீதான சந்தேகப் பார்வை போகவில்லை. விலகவில்லை.
இப்போது கிட்டத்தட்ட எல்லாமே தெளிவாகி விட்டது. தானும் கெட்டு, தன்னுடன் சேர்ந்தவர்களையும் காலி செய்துள்ளார் வைகோ. தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி வாங்கியுள்ள வாக்குகளைப் பார்த்தால் மொத்தமாக 6 சதவீதம் கூட வரவில்லை. இதில் மிகப் பெரிய கேவலம் - தேமுதிகவுக்குத்தான்.
ஆரம்பத்திலிருந்தே சாலிடாக வாக்குகளைப் பெற்று வந்தது தேமுதிக. கடந்த தேர்தலில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக. ஆனால் இன்று அதை காலி செய்துள்ளார் வைகோ.
அதேபோலத்தான் கம்யூனிஸ் கட்சிகள். இரு கட்சிகளும் தலா 2 சதவீத அளவுக்கு வாக்குகளை வைத்திருந்தன. அதையும் காலி செய்து விட்டார் வைகோ.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தையும் பதம் பார்த்து விட்டது இந்தக் கூட்டணி. எல்லாவற்றையும் ஊற்றி மூடிய மதிமுக கடைசியில் அது வெறும் 0.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி கூட 0.8 சதவீதவாக்குகளைப் பெற்றுள்ளது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.
இப்படி திமுகவுக்கு சாதகமாக போக வேண்டிய வாக்குகளை மிகச் சாதுரியமாக அதிமுக பக்கம் திருப்பி விட்டுள்ளார் வைகோ என்பதே உண்மை. தேமுதிக மட்டும் திமுகவுடன் போயிருந்தால் நிச்சயம் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும். அதைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் திருமாவளவனோ, கம்யூனிஸ்டுகளோ திமுக பக்கம் போய் விடாமலும் தடுத்து அதிமுகவைக் காப்பாற்றியுள்ளார் வைகோ என்பதே உண்மையாகும்.
மொத்தத்தில் தானும் கிணற்றில் விழுந்து, மற்றவர்களையும் குப்புறத் தள்ளி விட்டுள்ளது மதிமுக... உண்மையில் அதிமுகவினர் வைகோவைத்தான் கொண்டாட வேண்டும்!
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications