மதிமுகவிற்கு போன செல்வம், ராமராஜனும் அதிருப்தி... அணிமாற தயாராகும் அதிமுகவினர்
ராமராஜன் உள்பட பல நட்சத்திர பேச்சசாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் அதிருப்தியில் இருப்பதால் அணிமாற தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ராமராஜன் உள்ளிட்ட பலரும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை செல்வம் அதிமுகவில் இருந்து மதிமுகவிற்கு சென்று விட்டார்.
அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இப்போது புதுக்கோட்டை செல்வமும் மதிமுகவிற்கு சென்று விட்டார். இதே போல பல நட்சத்திர பேச்சாளர்கள், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் அதிமுகவை விட்டு விலக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்து மதிமுகவில் இணைந்துள்ளார்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு சொன்ன ராமராஜன்
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சசாமி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்த போது பல பேச்சாளர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றனர். அதில் ராமராஜன், தியாகுவும் கூட ஓபிஎஸ் பக்கம் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

கண்டு கொள்ளாத ஓபிஎஸ்
பிரிந்த அணிகள் சில மாதங்களில் இணைந்தன. ஆனால் பிரிந்த ஆதரவாளர்கள் இன்னமும் மனதளவில் இணையவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. துணை முதல்வராக இருக்கும் ஒபிஎஸ், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களை தற்போது கண்டு கொள்ளவில்லையாம்.

நட்சத்திர பேச்சாளர்கள்
கடந்த சில மாதங்களாக பொதுக்கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் பல பேச்சாளர்களின் வீட்டில் வறுமை குடியேறியுள்ளதாம்.

பாதுகாப்பு இல்லையா?
அதிமுகவில் இருந்து முதலில் விலகியவர் ஆர்த்திதான். அதிமுகவில் இருந்து விலகிய அனிதா குப்புசாமி, பெண்களுக்கு அதிமுகவில் பாதுகாப்பு இல்லை என்று கூறினார். நமீதாவோ திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications