அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம்... தேதி அறிவித்தார் ஜெ.
சென்னை: அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறும்.
அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை பொதுமக்களிடையே விளக்குதல், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள் மற்றும் இணைப்பு சங்கங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.
அதன்படி, 26-ந் தேதி நெல்லையிலும், 27-ந் தேதி மதுரையிலும், 28-ந் தேதி திருச்சியிலும், 29-ந் தேதி கோவையிலும், மார்ச் 1-ந் தேதி தர்மபுரியிலும், 2-ந் தேதி விழுப்புரத்திலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
இறுதிநாளான 3-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தியம், காஞ்சீபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்கள் பங்குபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி, எம்.எல்.ஏ., தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications