அதிமுகவுக்குத்தான் ஓட்டு போட்டீங்களா?” – சத்தியம் செய்யச் சொல்லி மிரட்டியதாக பெண்கள் புகார்!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்குதான் ஓட்டுப் போட்டீர்களா என்று சத்தியம் செய்யச் சொல்லி அதிமுகவினர் மிரட்டியதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் வருகின்ற 16-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், நேற்று தேர்தலின்போது அதிமுகவினர் வாக்களித்த பெண்களை மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி மணப்பாறை ஒன்றியம் பொத்தமேட்டுப்பட்டி புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஆண்டவர்கோவில் பூசாரிப்பட்டியை சார்ந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம்,''அதிமுகவுக்குதான் ஓட்டு போட்டாயா? குழந்தை மீது சத்தியம் செய்'' என்று கேட்டு மிரட்டி உள்ளனர் அதிமுக விசுவாசிகள்.
இதுகுறித்து புகார் தெரிவித்த பெண்கள், ''சத்தியமா ஓட்டு போட்டீங்களான்னு கேட்டாங்க. நம்பிக்கை இல்லையான்னு கேட்டோம். காசைக் கொடுத்திடு''ன்னு மிரட்டினாங்க" என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications