காரைக்குடியில் அதி தீவிர அதிமுக ஆதரவு அலை: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: தமிழகத்தின் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவு, காரைக்குடியில்தான் அதிமுகவுக்கு மிக மிக அதிக ஆதரவு அலை காணப்படுவதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அதிமுக அலை முழுமையாக வீசுவதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடவில்லை. மாறாக காங்கிரஸுக்கு சீட் கொடுத்துள்ளது.

அதிமுகவுக்கு சமமான வேட்பாளர்கள் இங்கு இல்லை என்பதால் அதிமுகவின் கை ஓங்கியுள்ளதாக கருதப்படுகிறது. அதிமுக சார்பில் நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோ போட்டியிடுகிறார். மதிமுக சார்பில் புலவர் செவந்தியப்பன், காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி போட்டியில் உள்ளனர். இதுதவிர பாஜக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
காரைக்குடி தொகுதி அதிமுக வேட்பாளாரான கற்பகம் இளங்கோ (55) சிவகங்கை மாவட்ட அதிமுக இணைச் செயலாளராகவும் இருக்கிறார். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் இளங்கோ, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
காரைக்குடியில் அதிமுகவுக்கு 71.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. நியூஸ் 7 கருத்துக்கணிப்பில் எந்தத் தொகுதியிலும், எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத ஆதரவு இது. காங்கிரஸ் கட்சிக்கு 20.3 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. 3வது இடத்தில் தேமுதிக 3.3 சதவீத ஆதரவுடன் உள்ளது. அடுத்த இடம் நோட்டாவுக்கு, 2.7 சதவீத ஆதரவு. பாஜகவுக்கு இங்கு சுத்தமாக ஆதரவு இல்லை.
இதனால்தானோ என்னவோ எச். ராஜா காரைக்குடியில் போட்டியிட விரும்பாமல் சென்னைக்கு ஓடி வந்து விட்டார் போலும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications