பாஜக - அதிமுக கூட்டணி?.. எடப்பாடி பழனிச்சாமி சூசக தகவல்!
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அமைச்சரவையில் அதிமுக ஏற்கெனவே இடம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றார்.

மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று சூலூர் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜகவின் பினாமி ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று கூறி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று பதிவிட்டிருந்தார்.
சென்னை நந்தனத்தில் 10 ரூபாய் ஆவின் பால் அறிமுக விழாவில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்பது தெரியாது. அதே நேரத்தல் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
நாங்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டிருக்கிறோம். அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து முடிவெடுப்பர். யாருடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications