கருத்துக்கணிப்புகள் பொய்... மீண்டும் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும்: வேல்முருகன் நம்பிக்கை
திண்டுக்கல்: நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். அப்போது அவர் பேசியதாவது:-

ஐல்லிக்கட்டுக்கு அனுமதி தராத மத்திய அரசை வன்மையாக கண்டிகிறேன். அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் 33வது பிரிவின் கீழ் மாநில அரசே அவசர சட்டம் மூலம் ஜல்லிகட்டை நடத்தலாம் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேனில் தடையே மீறி என் தலைமையில் தென்மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தபடும்.
திமுக வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யானது, செம்மரப்பாக்கம் ஏரி திறந்துவிட்ட விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்வது படகு பறிமுதல் செய்து வரும் நடவடிக்கைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் திராவிட கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் வளர முடியாது.தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஒட்டு வங்கி கிடையாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்". என்றார்.

பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், "மறைந்த குடியரசுத் தலைவர் கலாம் கனவு காண சொன்னார்... அந்த கனவு காணும் உரிமை அன்புமணி ராமதாஸுக்கும் உண்டு; அவரது அப்பா டாக்டர் ராமதாஸுக்கும் உண்டு" எனப் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications