100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சிதான்.. அடித்து சொல்லும் அமைச்சர்!!
ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகதான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் வரலாறு படைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகதான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் வரலாறு படைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை தனக்கன்குளத்தில் அதிமுக பிரசார சைக்கிள் பேரணி தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, தங்கமணி, ராஜேந்திரபாலஜி, சேவூர் ராமச்சந்திரன், பாஸ்கரன் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் தற்போது சீராக மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அறிவிப்பில்லா மின்வெட்டை கண்டுபிடித்தவர்களே திமுகவினர்தான் என சாடினார்.
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் மற்ற அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஆர்கே நகரில் குறுக்கு வழியில் வெற்றிபெற்றதுபோல் தினகரனால் வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என சவால் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுக தான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் சாதனை படைக்கும் என அடித்துக்கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications