கரூரில் தம்பித்துரை வெல்கிறார். - தேமுதிக படு தோல்வி: நக்கீரன் கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தற்போதைய எம்.பி. தம்பித்துரை வெல்கிறார். தேமுதிக 3வது இடத்தைப் பிடித்து படு தோல்வியையும் சந்திக்கிறது என்று நக்கீரன் சர்வே கூறுகிறது.

மக்களின் மனக்கொதிப்பை அதிகம் வெளிப்படுத்திய தொகுதிகளில் முதன்மையானது கரூர்.

கரூர் சட்டமன்றத் தொகுதியைத் தவிர மற்ற 5 சட்டமன்றத் தொகுதிகளும் கிராமப்புறங்கள் நிறைந்தவை என்பதால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் இவர்களிடம் இல்லை.

அம்மா மீது வேடசந்தூரில் அதிருப்தி

அம்மா மீது வேடசந்தூரில் அதிருப்தி

வேடசந்தூர் பகுதியில், ""அய்யா ஆட்சியில் எல்லா இலவசமும் சீக்கிரமா வந்துச்சு. ஆனா இப்ப அம்மா ஆட்சியில் சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆனால் எப்ப வரும்னு தெரியல. நீங்க ஏதாவது சொல்ல முடிஞ்சா சொல்லுங்க'' என்கிறார்கள்.

கரண்ட் வருமா வராதா...

கரண்ட் வருமா வராதா...

"இந்த கரண்ட் பிரச்சினை உண்மையிலே சரியாயிடுமா? இதுல யாரு உண்மைய சொல்றா? அம்மாவா, கலைஞரா?'' என்று நிறையபேர் சந்தேகத்தைக் கேட்டார்கள்.

விராலிமலையில் இலைக்குத்தான் ஓட்டு

விராலிமலையில் இலைக்குத்தான் ஓட்டு

விராலிமலை பகுதியில் உள்ள கிராமங்களில், "இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுறது தான் எம்.ஜி.ஆருக்கு நாங்க பண்ற கடமை. யாரு வேட்பாளர்னு நாங்க கவலைப்படுறதில்லை'' என்று பெருமையாகவே சொல்கிறார்கள்.

அரவக்குறிச்சியில் விஜயகாந்துக்கும் ஆதரவு

அரவக்குறிச்சியில் விஜயகாந்துக்கும் ஆதரவு

அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பெண்கள் "எங்க வீட்டுக்காரர் சூரியனுக்கு ஓட்டு போட சொல்லி சொல்லுவார். ஆனா எனக்கு விஜயகாந்தக்கு ஓட்டு போடணும்னு ஆசை. நாம ஓட்டு போடுறது யாருக்கும் தெரியபோறது இல்ல. வீட்டுகாரர் சொல்றதைத்தானே கேட்கணும்?'' என்றார் அப்பாவித்தனமான விவரத்துடன்.

எதுவும் நடக்கப் போவதில்லையே

எதுவும் நடக்கப் போவதில்லையே

இந்தத் தேர்தலினால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்பதே மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதனால் தான் வேறெந்த தேர்தலிலும் இல்லாமல் இந்த முறை ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பல இடங்களிலும் நேரடி எதிர்ப்பு வெளிப்பட்டது. மற்ற வேட்பாளர்கள் மீதும் மக்களுக்குப் பெரிய நம்பிக்கையில்லை.

சென்டிமென்ட்டில் முந்துகிறது அதிமுக

சென்டிமென்ட்டில் முந்துகிறது அதிமுக

எதிர்ப்புக் குரல்கள் பலமாக இருந் தாலும் எம்.ஜி.ஆரின் சின்னம் என்ற சென்ட்டிமென்ட்டில் இரட்டை இலை இங்கே முந்துகிறது. அதுபோலவே ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள வாக்கு வங்கி, அதனதன் தலைவர்கள் மீதான மக்களின் ஈர்ப்பு ஆகியவை மற்ற கட்சிகளுக்குக் கை கொடுக்கிறது.

அதிமுகவைப் பின் தொடருகிறது திமுக

அதிமுகவைப் பின் தொடருகிறது திமுக

அந்தவகையில் அ.தி.மு.க.வை உதயசூரியன் பின்தொடர்கிறது. மற்றவர்கள் அடுத்தடுத்து வருகிறார்கள்.

முதலிடத்தில் அதிமுக

முதலிடத்தில் அதிமுக

அதிமுகவுக்கு 271 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில் திமுக

2வது இடத்தில் திமுக

திமுகவுக்கு 238 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேவலமான தோல்வியை நோக்கி தேமுதிக

கேவலமான தோல்வியை நோக்கி தேமுதிக

தேமுதிக நிலை ரொம்பக் கேவலமாக உள்ளது. அதாவது 47 பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக கூட்டணி கை கொடுக்கவில்லை.

4வது இடத்தில் காங்கிரஸ்

4வது இடத்தில் காங்கிரஸ்

அதை விடக் கேவலமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. அதாவது 34 பேர் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+