For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பியதே அதிமுகதான் - நமது அம்மா

வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து 1999ஆம் ஆண்டு அந்த அரசை வீட்டுக்கு அனுப்பியதே அதிமுக தான் என்று நமது அம்மா நாளிதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுகவாலும் முடியும் என்று நமது அம்மா நாளிதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அந்த அரசை வீட்டுக்கு அனுப்பியதே அதிமுக தான் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADMK wont support confidence motion against BJP says Namadu Amma

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் அதிமுகவை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு ஒத்துழைக்க முடியாது என அதிமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நமது அம்மா நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசை வீழ்த்துவது நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

பிறர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கு என்ன பயன் என ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுக்கும் நிலையில் அதிமுக அரசு இல்லை.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுகவாலும் முடியும். கடந்த 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அந்த அரசை வீட்டுக்கு அனுப்பியதே அதிமுக தான் என்று அந்த நாளிதழ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தரும் என்று கூறிய முன்னாள் எம்பி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The AIADMK, despite its political posturing on the Cauvery issue, is not ready to oppose the BJP given the serious corruption allegations on the government and the internal fragility in the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X