Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன்... வேலை பார்த்த இடமெல்லாம் வில்லங்கம்தான்!

மதுக்கடைக்கு எதிராக போரடிய பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு வில்லங்கவாதி என்று தெரியவந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார். தென்காசியில் பணியாற்றிய போது ஐயப்ப பக்தர்கள் மீது லத்திசார்ஜ் நடத்தி சர்ச்சையில் சிக்கியவர் இவர்.

திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை சரமாரியாக அடித்து அத்தனை பேரின் கோபத்தையும் வாங்கிக் கொட்டியுள்ளார் பாண்டியராஜன்.

சமூக வலைதளங்களில் பாண்டியராஜனுக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.பலரும் பாண்டியராஜனின் அநாகரீக செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். ஆனால் இந்த பாண்டியராஜன் அடிப்படையிலேயே பிரச்சினையானவர் என்று தெரிய வந்துள்ளது.

பக்தர்களை அடித்து வெளுத்தவர்

பாண்டியராஜன் டி.எஸ்.பி.யாக தென்காசி யில் பணியாற்றிய போது முல்லை பெரியாறு அணை பிரச்சினை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்களை கேரள மாநில பகுதியை சார்ந்த வர்கல் தாக்குதல் நடத்திய தை கண்டித்தது பிரானூர் பார்டரில் சாலை மறியல் செய்தனர். அப்போது ஐயப்ப பக்தர்களை தடியடி செய்து விரட்டினார்.

சப் இன்ஸ்பெக்டரை சாத்தியவர்

சப் இன்ஸ்பெக்டரை சாத்தியவர்

அதே போல செங்கோட்டையில் பணியாற்றிய திலீபன் என்ற உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் இவருக்கும் கைகலப்பு நடைபெற்றது. இதற்காக துறைரீதியாக அவர் மீது விசாரணை நடைபெற்றுள்ளது.

திருப்பூரில் அடிதடி

திருப்பூரில் அடிதடி

இப்போது திருப்பூர் சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது ஒரு பெண்ணை காவல்துறை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் அடித்துள்ளார்.

டிஸ்மிஸ் செய்யுங்கள்

டிஸ்மிஸ் செய்யுங்கள்

அவரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண்ணை தாக்கியவர் காவல் துறையில் பணியாற்ற தகுதியற்றவர் என்ற அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+