பொது இடத்தில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை - ராஜேஷ் லக்கானி
சென்னை: மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரம் செய்தால் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையான ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களை காண்பித்து கைப்பற்றப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொது இடங்களில் அனுமதியின்றி போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பர தட்டிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேர்தல் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாநகர காவல் துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதிப் பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின்னரே விளம்பரம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து, சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொது நடத்தை, தேர்தல் பிரச்சாரம், அச்சக விளம்பரம், கல்வி நிலையங்கள், பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications