தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.... உயர் நீதிமன்றத்தில் வழக்கு... மதியமே விசாரணைக்கு வருகிறது!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து இன்று வழக்கு தொடரப்பட உள்ளது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். மனு தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வழக்கு தொடருவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அதனால் மதியமே இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான நிலை உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். நீதிபதி ரவிச்சந்திரன் அமர்வு முன், வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, மில்டன், பாரிவேந்தர் ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்தனர்.
துப்பாக்கிக் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இறந்தோர் குடும்பங்களுக்கு சட்ட உதவி அளிப்பதை தடுக்கக் கூடாது. உயிரிழந்தோருக்கு மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதை மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியமே விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது. அதையடுத்து வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இன்று மதியமே இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications