18 எம்எல்ஏக்கள் நீக்கம்... சட்டசபையில் அதிமுகவின் பலம் எத்தனை?

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி இழந்ததாக பேரவைச் செயலர் அறிவிப்பு. கட்சி மாறியதற்காக 18 எம்எல்ஏக்களை நீக்கி சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலம் என்ன என்பதை பார்க்கலாம்.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் 19 எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர். இவர்களில் ஜக்கையன் எம்எல்ஏ முதல்வர் பழனிசாமி அணிக்குத் தாவியதால், 18 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்தது குறித்து விளக்கமளிக்குமாறு சாபநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த நோட்டீசுக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கக் கடித்தத்தை அளித்தார். இந்நிலையில் இன்று 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து பேரவைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். சபாநாயகர் உத்தரவின் பேரில் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 135 எம்எல்ஏக்கள்

135 எம்எல்ஏக்கள்

முதல்வர் எடப்பாடி அரசுக்கு தற்போது 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்..ஏக்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 233 பேர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரையும் நேர்த்து அதிமுகவில் மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.

 ஈபிஎஸ்க்கு 116 பேர் ஆதரவு

ஈபிஎஸ்க்கு 116 பேர் ஆதரவு

இவர்களில் 19 பேர் தற்போது ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆகையால் எடப்பாடியார் அரசுக்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருந்தது.

 அணி மாறியதால் 117 ஆனது

அணி மாறியதால் 117 ஆனது

இந்நிலையில் தினகரன் தரப்பில் இருந்து ஜக்கையன் எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார், இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு 117ஆக உள்ளது.

 எளிதில் பெரும்பான்மை

எளிதில் பெரும்பான்மை

சட்டசபையில் தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கு 108 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதாக தெரிகிறது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்ட நிலையில் எளிதில் 108 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தவிடும் என்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணி எம்எல்ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அந்சாரி வாக்களிக்காவிட்டாலும் பழனிசாமி அரசு தப்பிவிடும்.

 எதிர்க்கட்சிகளின் பலம் என்ன?

எதிர்க்கட்சிகளின் பலம் என்ன?

திமுகவிற்கு சட்டசபையில் 89 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 எம்எல்ஏ ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். எதிர்க்கட்சிக்களின் கூட்டணியை பொருத்தவரை 98 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+