ட்விட்டர் புரபைலாக கருணாநிதியுடன் இருக்கும் படத்தை திடீரென வைத்த குஷ்பு- காங். தொண்டர்கள் ஷாக்!
ட்விட்டர் புரபைலாக கருணாநிதியுடன் இருக்கும் படத்தை குஷ்பு திடீரென வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை: ராகுல் காந்தியை சந்திக்கவிடாமல் தடுத்து சதி செய்ததாக கோபத்தில் இருக்கும் நடிகை குஷ்பு திடீரென தமது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக கருணாநிதியுடன் இருக்கும் படத்தை மாற்றியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திமுகவில் இருந்தபோது தாம் ஓரம்கட்டப்பட்டுவதாக நடிகை குஷ்பு ஆதங்கப்பட்டார். அத்துடன் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தொடர்பாகவும் சில கருத்துகளை கூறியிருந்தார். இதனால் குஷ்புவை திமுக தொண்டர்கள் தாக்கினர்.
இதையடுத்து அரசியலில் சற்று ஒதுங்கியிருந்த குஷ்பு திடீரென காங்கிரஸில் ஐக்கியமானார். அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் கூட கிடைத்தது.

நக்மாவுக்கும் பொறுப்பு
அதேநேரத்தில் நடிகை நக்மா, மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக இருக்கிறார். இருவரும் தமிழ் சினிமா நடிகைகள் என்பதால் தமிழகத்தில் யார் கை ஓங்கும்? என்பதில் போட்டி போட்டு கோஷ்டி சேர்த்தனர்.

தமிழகத்தில் முகாம்
நடிகை குஷ்பு வெளிநாடு சென்றபோது நக்மா தமிழகத்திலேயே டேரா போட்டு அரசியல் தலைவர்களை சந்தித்து வந்தார். குஷ்புவுக்கு செக் வைக்கும் வகையில் அண்ணா அறிவாலயம், நக்மாவுக்கு ஆதரவு தந்தது.

ராகுலை சந்திக்க முயற்சி
இதனிடையே கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி சென்னை வந்து முகாமிட்டார். அப்போது அவரை சந்திக்க குஷ்பு மெனக்கெட்டார். ஆனால் ராகுலுடனான சந்திப்பு நடைபெறவில்லை. இதற்கு காரணமே நக்மா என கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு.

புரபைல் படம் மாற்றம்
இந்நிலையில் ட்விட்டரில் தம்முடைய புரபைல் படமாக கருணாநிதியுடன் இருக்கும் படத்தை குஷ்பு வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு எப்படி திமுக தலைவருடன் இருக்கும் படத்தை வைக்கலாம்? திமுகவுக்கு போவேன் என மீண்டும் காங்கிரஸ் கட்சியை மிரட்டுகிறாரா குஷ்பு? என கொந்தளிக்கின்றன கதர் சட்டைகள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications