குலுங்கபோகுது.. தகுதி நீக்கத்துக்கு பின் முதல் முதலாக வயநாடுக்கு ராகுல் விசிட்! இன்று பிரமாண்ட பேரணி

Subscribe to Oneindia Tamil

வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தகுதி நீக்கத்துக்கு பிறகு முதல் முதலாக அவர் இன்று வயநாடு தொகுதிக்கு சென்று பிரமாண்ட பேரணி நடத்தி பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தார். அவர் உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

After his disqualification Rahul Gandhi visit in Wayanad today, hold roadshow and public rally

முன்னதாக ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசினார். அப்போது‛மோடி' என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது.

லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் பற்றி ராகுல் காந்தி பேசினார். அப்போது அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் மோடி என முடிகிறது? என கேள்வி எழுப்பினார். இது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் மோடி எனும் ஓபிசி பிரிவினரை ராகுல் காந்தி அவமதித்ததாக புகார்கள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி எனக்கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி தனது தகுதி நீக்கத்துக்கு பிறகு இன்று முதல் முறையாக கேரளா மாநிலம் வயநாடு செல்கிறார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் செல்கிறார்.

அதன்பிறகு ராகுல் காந்தி வயநாட்டில் உள்ள கல்பேட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணியை நடத்த உள்ளார். இந்த பேரணி மதியம் 3 மணிக்கு எஸ்கேஎம்ஜே உயர்நிலை பள்ளியில் துவங்கி நடைபெற உள்ளது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான கேசி வேணுகோபால், தாரிக் அன்வர், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், கேரளா காங்கிரஸ் தலைவர் சுதாகரன், முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பாணக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கல் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+