For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெட் அலர்ட் எச்சரிக்கை... கேரளத்தில் எண்டிங்.. தமிழகத்தில் ஓபனிங்.. கண் முன் நிழலாடும் 2015 சென்னை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: கேரளத்தை தொடர்ந்து தமிழகத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழையின்போது கேரளத்தில் கடந்த மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தன. பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர்.

    அதிகபட்சம் பெய்த இந்த மழையால் கடவுளின் தாய்வீடு என்ற கூறப்படும் கேரள மாநிலமே சீர்குலைந்தது.

    அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    இந்நிலையில் இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மலை பாங்கான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதிக மழை

    அதிக மழை

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கெனவே கடந்த மாதம் பெய்த மழைக்கே வீடுகளையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்துவிட்டோம். இன்னொரு முறை அதிகபட்சம் மழை பெய்தால் என்னவாகுமோ என்ற கவலை இப்போது தொற்றிக் கொண்டுள்ளது.

    குறைந்த நேரத்தில் அதிக மழை

    குறைந்த நேரத்தில் அதிக மழை

    மேற்கண்ட மாவட்டங்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை கொட்டி தீர்க்கும் என்பதாகும். ரெட் அலர்ட் என்றால் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வது.

    சென்னை 2015

    சென்னை 2015

    இதனிடையே தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை (7-ஆம் தேதி) மழை முடிவடையும் நிலையில் தமிழகத்தில் ஆரம்பிப்பதால் 2015 சென்னை வெள்ளம் மக்கள் கண் முன்னே நிழலாடுகிறது.

    English summary
    After Kerala, Tamilnadu will face heavy rainfall. Red alert issued to Tamilnadu also.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X