முட்டையில் இருந்து ‘ஆம்லெட்’ வரும்... மாணவர்களின் அறியாமை குறித்து சூர்யா வேதனை
சென்னை: முட்டையில் இருந்து ஒரு உயிரினம் வரும் என்பது கூட இன்றைய மாணவர்கள் பலருக்குத் தெரிவதில்லை என நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் அகரம் பவுண்டேஷன், தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு 2 நாள் கருத்தரங்கம் யாதும் ஊரே என்ற பெயரில் சென்னை சாந்தோம் செயின்ட் பீட்டஸ் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்த சூர்யா விழா மேடையில் பேசியதாவது:-

நாம் வாழ...
உலகில் 130 லட்சத்துக்கும் அதிகமான உயிர் இனங்கள் வாழ்கின்றன. அதில் ஒரு உயிரினம் மனிதன். இன்று யானையை கொன்று தந்தம் எடுத்து யானை பொம்மை செய்கிறார்கள். நாம் வாழ எதையும் செய்ய துணிந்து விட்டோம்.

அறியாமை...
முட்டையில் இருந்து என்ன வரும் என்று கேட்டால், மாணவன் ‘ஆம்லெட்' வரும் என்கிறான். அதில் ஒரு உயிரும் வளரும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஆறு... ஆழி...
தனக்கான பாதையை அறுத்துக் கொண்டு போவதால் அதற்கு ஆறு என்று பெயர். குளிக்க பயன்படுவது குளம். நீர் ஓடுவதால் நீரோடை. ஏர் பாசனத்துக்கு பயன்படுவதால் ஆழம் அளவிட முடியாமல் இருப்பதால் கடலுக்கு ஆழி என்று பெயர்.

நீரைக் காணவில்லை...
அகழி, அருவி உருணி, ஊற்று, கண்மாய், கல்குட்டை, கால்வாய், கிணறு என தமிழர்கள் நீர் நிலை பற்றிய சொற்களை வழங்கினார்கள். ஆனால் இன்று சொற்கள் மட்டும்தான் இருக்கிறது. எதிலும் நீர் இல்லை.

மாயமான ஏரிகள்...
தமிழ்நாட்டில் மட்டும் 40 ஆயிரம் ஏரிகள் இருந்தது என்று மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார். ஆனால் இன்று பாதி ஏரிகள் இருந்த இடம் தெரியவில்லை.

பறவைகளின் முக்கியத்துவம்...
மழை நீரை சேமித்து கோடையில் வறட்சி வராமல் நம்முன்னோர்கள் வாழ்ந்தார்கள். இன்று ஏரிகள் தொலைந்து விட்டன. மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வாழ முடியும். ஆனால் இன்று பறவைகள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது என்று பறவையியல் அறிஞர் சலீம் அலி கூறியுள்ளார்.

மஞ்சள் பை...
இன்று சதுப்பு நிலங்களை எல்லாம் குப்பைமேடு ஆக்கியதால், வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. முன்பு மஞ்சள்பை கொண்டு வந்து பொருட்கள் வாங்கினோம். இன்று பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்குகிறோம்.

இந்தியாவின் இளைஞர் சக்தி...
உலகிலேயே அதிக இளைஞர் சக்தி உடைய நாடு இந்தியா. 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மாபெரும் மனித சக்தி நமக்கு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். இயற்கை பொறுமை இழக்கும் போது மனிதர்கள் பெரும் துன்பப்படுகிறார்கள்.

மாற்றம் உறுதி...
இயற்கையை நேசித்தால் மனிதர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி ஏற்படும். மழை வெள்ளத்தின் போது எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் உதவினோம். மழை வெள்ளம் நமக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. ஒன்று சேர்த்தது. அனைவரும் இணைந்து பணியாற்றினால் நிச்சயம் மாற்றம் வரும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications