ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம்… வாகனங்கள் வரக் கூடாது… அலங்காநல்லூர் மக்கள் சாலை மறியல்
அலங்காநல்லூர் சாலை வழியாக எந்த வாகனமும் வரக் கூடாது என்று 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அவசரச்சட்டத்தை அடுத்து, இன்று அலங்காநல்லூரில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அலங்காநல்லூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை செய்ய யாரும் அலங்காநல்லூர் வரக் கூடாது என்று கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கோரி அலங்காநல்லூரில் ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமே ஒழிய அவசரச் சட்டம் தேவையில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.

எனினும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், அரசு வாகனங்கள் எதுவும் அலங்காநல்லூர் வழியாக செல்லக் கூடாது என்று கூறி அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாடிவாசல் மற்றும் கேட்டுக்கடை ஆகிய இரண்டு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறது. என்றாலும், இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு வாகனங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே போராட்டக்காரர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அலங்காநல்லூர் வழியாக மதுரை, பாலமேடு, மேலூர் என எந்தப் பகுதிக்கும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று மக்கள் தங்கள் போராட்டத்தை உறுதியாக நடத்தி வருகன்றனர்.
இதனையடுத்து, அரசு அதிகாரிகள் அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்ய முடியாத சூழ்நிலை அரசு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications