மே 4 முதல் 28 தேதி வரை... அக்னி ஆரம்பம்... மக்களே உஷார்!
சென்னை: தமிழகத்தில் மே 4ம் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்குகிறது. இது மே 28 ம் தேதி வரை நீடிக்கும்.
கத்திரி வெயில் காலத்தின்போது உஷ்ணம் அதிகம் இருக்கும் என்பதால் அதிலிருந்து தப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில், தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொது மக்களும், தொழிலாளர்களும் பெரும் அவஸ்தை அடைந்து வருகின்றனர்.

வெப்ப நோய் தாக்கம்
கடும் வெப்பம் காரணமாக, வெப்பம் சார்ந்த நோய்கள் பொது மக்களை தாக்கி வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மே 4 முதல் கத்திரி
இந்த நிலையில், தமிழகத்தில் மே 4 முதல் 28 ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும்.

வெயில் வறுத்தெடுக்கும்
இந்த நேரத்தில் வழக்கமான வெப்பத்தை விட அதிக அளவு வெப்பம் இருக்கும். இதனாலேயே அக்னி வெயில் காலம் என்றாலே பொது மக்கள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

கோடை மழை வருமா..
தற்போது, அதிக அளவில் மரங்கள் இல்லாமல் இருப்பது, கோடை மழை பொய்த்துப் போனது போன்ற பல்வேறு காரணங்களால், அக்னி வெயில் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உஷாராக இருந்தால் நல்லது
எனவே, பொது மக்கள் வெயில் காரணங்களால் ஏற்படும் நோயகள் குறித்தும், அதற்கு தேவையான முதல் உதவி குறித்தும், அருகில் உள்ள டாக்டர் நம்பர் வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியம் ஆகும்.

மோர்- இளநீர் நல்லது
கடும் வெப்பத்திலிருந்து நமது உடலைக் காக்க இளநீர், மோர், தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை விட இது சிறந்ததும் கூட.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications