மே 4 முதல் ‘அக்னி’ ஆட்டம் ஆரம்பம்…. 110 டிகிரி வரை சுடுமாம்!
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மே 29ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் வெப்பநிலை 110 டிகிரிவரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுட்டெரிக்கும் வெயிலை எண்ணி இப்போது மக்களுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.
ஜோதிடத்தின்படி சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நகர்ந்து செல்லும் காலம்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் என்று கூறப்படுகிறது.

அக்னி நட்சத்திர காலம்
அக்னி நட்சத்திர காலத்தில் பொதுவாக உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம், சுப காரியங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது.

26 நாட்கள்
பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு 4ஆம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

110 டிகிரியை எட்டும்
இந்த நேரத்தில் வெயில் 110 டிகிரி அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். ஆனால், தமிழகத்தில் இப்போதே அக்னி நட்சத்திரக் காலத்தை போன்ற வெயில் காணப்படுகிறது.

வறண்ட வானிலை
பெரும்பாலான பகுதிகளில் சதமடித்து வரும் வெயில் அதோடு மழை வேறும் பெய்யாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. எனினும் அடுத்த இரண்டு நாட்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications