தினகரன் பேசினாலும் களத்தில் கலவரம் தான்.. “இன்னும் ஜெல் ஆகல”.. அதிமுக மேடையில் ஏற மறுத்த அமமுகவினர்!
சென்னை: அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், களத்தில் இரு கட்சியினரும் இன்னும் 'ஜெல்’ ஆகாத சூழலே நிலவுவதாக கூறப்படுகிறது. அதிமுக கட்சி மேடையில் அமமுகவினர் ஏற மறுத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, ஜெகன் மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம், ஜாண்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தினகரன் + எடப்பாடி
எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக விமர்சித்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீரென யூ டர்ன் அடித்து அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து, 'அண்ணன் எடப்பாடி பழனிசாமி” எனப் பேசி வருகிறார். தேர்தலுக்காகவே கூட்டணி என்றாலும், 8 வருடங்களாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்துவிட்டு, எப்படி கைகோர்த்துச் செயல்படுவது என அமமுக நிர்வாகிகளே கையைப் பிசைகின்றனராம்.
பங்காளிகள்
என்.டி.ஏ கூட்டணிக்குள் அமமுக வந்துவிட்ட போதிலும், அதிமுகவுக்காக ஓட்டு கேட்க அமமுகவினர் தயங்குவதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பகையை மறந்து பங்காளி ஆகிவிட்டோம் என டிடிவி தினகரன் கூறியும், அமமுகவினர் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என அதிமுகவினர் புகார் வாசிக்கின்றனர்.
மேடையில் ஏற மறுத்த அமமுகவினர்
எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூர் சென்றபோது, அமமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கவில்லை. அதிமுக மேடையில் ஏற தினகரன் அனுமதி தரவில்லை என அமமுகவினர் தெரிவிப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அமமுக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முக்கிய இடங்களை கேட்டு வருகிறது. அமமுக சார்பில் போட்டியிடுவதற்காக சிலர் தயார் நிலையில் உள்ளனர். தொகுதியில் பணியாற்றி, சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை இந்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட, அங்குள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவுக்காக பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.
கூட்டணிக்குள் உள்குத்து
அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம். கூட்டணிக்கு எதிராக உள்குத்து நடக்குமென்றும், எங்களுக்குத்தான் நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற ரீதியில் அமமுக நிர்வாகிகள் சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இது கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படும் சூழலை உருவாக்கி உள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications