இந்த கூத்த பாருங்க.. அழகிரிக்காக 'வேலை பார்த்த' அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அழகிரிக்காக வேலை பார்த்த அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்!- வீடியோ

    சென்னை: சென்னையில் இன்று, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்திய அமைதி பேரணிக்கு ஆதரவாக, பாஜக மற்றும் அதிமுக கட்சியினர் இணையதளத்தில் பதிவுகளை வெளியிட்டதை பார்க்க முடிந்தது.

    சுமார் ஒரு லட்சம் பேரைக் கூட்டி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தி காட்டுவேன் என்று அழகிரி அறிவித்திருந்தார்.

    இன்று சுமார் 15,000 பேர் அவரது பேரணியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஊர்வலத்தை பிரமாண்டமாக காட்ட வேண்டும், அதை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் சில பாஜகவினர் மற்றும் அதிமுகவினருக்கு மிகுந்த அக்கறை இருந்தது.

    திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அழகிரியின் பேரணி வரவேற்பை பெற்றது போல காட்ட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். சமூக வலைத்தளத்திலும் அழகிரிக்கு ஆதரவு இருப்பதை போல காண்பிக்க முயற்சிகள் நடந்தன.

    திமுகவிற்கு அழகிரி என்று பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் ஹாஷ்டேக் (#AlagiriForDMK) போட்டு அதை தேசிய அளவில் டிரெண்ட் செய்ய முயற்சிகள் நடந்தன. இதில் அதிகம் பதிவை வெளியிட்டது, என்னவோ பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள்தான்.

    சில டிடிவி தினகரன் ஆதரவு நெட்டிசன்களும்கூட, இவ்வாறு பதிவு போட்டதை பார்க்க முடிந்தது. அதுபோன்ற சிலரின் பதிவுகளை நீங்களே பாருங்கள்

    பாஜக ஆதரவாளர்

    அல்லு சில்லு எல்லாம் சிதறு

    அஞ்சா நெஞ்சன் கூட்டத்தை பார்த்து கதறு 💪💪. இப்படி ட்வீட் செய்துள்ள இந்த நெட்டிசன் வழக்கமாக வலதுசாரி கருத்துக்களை வெளியிடுபவர். பாஜக தொடர்பான விஷயங்களில் அக்கட்சிக்கும், தலைவர்களுக்கும் ஆதரவாக ட்வீட் செய்து வருபவர் என்பது கவனிக்கத்தக்கது.

    வலதுசாரி ஆதரவாளர்

    #AlagiriforDmk அஞ்சாத நெஞ்சன் பழ மொழிகள் பேசினாலும் தவறு இருக்காது.திமுக இவர் பின் செல்லலாம். இவ்வாறு ஸ்டாலினை கிண்டல் செய்து, அழகிரியை தூக்கிப்பிடிக்கும், இவரும் வலதுசாரி நெட்டிசன்தான். இவரது பழைய பதிவுகளை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். பாஜகவிற்கு ஆதரவாக ட்வீட்டுகளை வெளியிட்டு வருபவர்.

    அதிமுக பிரமுகர்

    அழகிரியால் கூட்டத்தைக் கூட்ட முடியுமா என்று நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். தினகரன் படிக்கும் பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர் அழகிரி. இப்படி சொல்லும் ஒரு ட்வீட்டை ரீட்வீட் செய்து, அதற்கு AlagiriForDMK என்று டேக் சேர்த்துள்ளது, பிரசாத் என்ற பக்கா அதிமுக நிர்வாகி. அவரது பயோவில் கூட தெளிவாக தான் ஒரு ஜெயலலிதா விசுவாசி என கூறியுள்ளதை கவனிக்க முடியும்.

    தினகரன் ஆதரவாளராம்

    திமுகவில் அழகிரி இருந்திருந்தால், ஆர்கே நகர் தேர்தலில் திமுக டெபாசிட்டாவது வாங்கியிருக்கும் என்று கூறுவது யார் என்று பார்த்தால், அவரது பயோவில் தான் ஒரு தினகரன் ஆதரவாளர் என குறிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், அழகிரி ஆதரவாளர்களை விட ஸ்டாலின் மீது இவர்களுக்குத்தான் எக்கச்சக்க கோபம் இருக்கும் போல.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+