பணம் தர முடியாது.. பீடா கடைக்காரரை மிரட்டும் அதிமுகவினர்!
அதிமுகவினர் பீடா கடைக்காரரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவு அதிமுகவினர் கோவையில் பீடா கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டலில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை, ஆர்.எஸ்.புரம் அண்ணபூர்ணா எதிரில் சிறிய பீடா கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவு அதிமுகவினர் பொருள் வாங்கி பணம் கொடுக்காமல் மிரட்டலில் ஈடுபட்டனர். இவர்கள் சீனி, முருகேசன் மற்றும் 25வது வார்டு அதிமுக செயலாளர் செல்வராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் கடையில் பொருள் வாங்கிவிட்டு, பணம் கொடுக்கவில்லை. பணம் கொடுக்குமாறு கடைக்காரர் கேட்டுள்ளார். அதற்கு பணம் தரமுடியாது என அவர்கள் மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அந்த கடைக்காரரே வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications