அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்னமும் மாறலாம்.. மாற்று வேட்பாளர்கள் மனுத்தாக்கலால் பரபரப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக சார்பில் மாற்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இவர்கள் மாற்றப்பட இன்னமும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்புமனு வாபஸ் வாங்க மே 2ம் தேதி, கடைசி நாளாகும்.
அதிமுக சார்பில் சைதாப்பேட்டையில் போட்டியிடும் பொன்னையனுக்கு மாற்றாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ. செந்தமிழன், ஆலந்துாரில் நிற்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு மாற்றாக, எம்.எல்.ஏ வெங்கட்ராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சைதை துரைசாமி
தி.நகர் தொகுதி வேட்பாளர் சத்யாவுக்கு மாற்று வேட்பாளராக மேயர் சைதை துரைசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னையில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாற்றாக அந்த தொகுதி செயலர் அல்லது பகுதி செயலர்கள் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்டங்களில் நகர செயலர், ஒன்றிய செயலர்களை மாற்று வேட்பாளர்களாக களம் இறக்கி உள்ளனர்.

பீதியில் வேட்பாளர்கள்
பல தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களாக கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இன்னமும் வேட்பாளர் பெயர் மாற்றம் இருக்குமோ என்ற பீதியில், வேட்பாளர்கள் உள்ளனர்.

மாற்று வேட்பாளர்கள்
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது மாற்று வேட்பாளர்களாக தங்களின் உறவினர்களை நிறுத்தக் கூடாது. கட்சி நிர்வாகிகளை தான் நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டது. அதேபோல வேட்பாளர்கள் மாற்று வேட்பாளர்களை மனு தாக்கல் செய்துள்ளனர்.

தள்ளுபடியாகுமா
தங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலோ கட்சி தலைமை கடைசி நேரத்தில் தங்களை வாபஸ் வாங்க சொன்னாலோ தங்களின் வாய்ப்பு பறிபோய் விடுமே என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர்.

மனு ஏற்பு
இந்நிலையில், வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பரிசீலனையின்போது, அதிகாரப்பூர்வ வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதும், மாற்று வேட்பாளர் மனு தள்ளுபடியாகி விடும். அதிகாரப்பூர்வ வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டால், மாற்று வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்படும்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications