ஓ.பி.எஸ், நத்தம் உட்பட 233 அதிமுக வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மட்டும் தனது வேட்புமனுவை கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்த நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இன்று மொத்தமாக ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினார்.

இதன்பின், விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் மற்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மதுரையில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வேட்பாளர்களுடன் சேர்த்து இதுவரை 233 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் அறிமுகம் முடிந்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமையான இன்று, வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மேலிட உத்தரவின்பேரில், பகல் 1 மணிக்கு அவர்கள், தங்களின் தொகுதிகளில், மனு தாக்கல் செய்தனர்.
227 தொகுதிகளில் அதிமுகவும் எஞ்சிய 7 தொகுதிகளில் சரத்குமார், கருணாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் போட்டியிடுகிறார்கள். இதில் ஜெயலலிதா தவிர்த்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
போடி தொகுதியில் பன்னீர்செல்வம், ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், ஆலந்தூர் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்திரா, ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம், ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி உள்ளிட்ட அதிமுகவின் பல அமைச்சர்களும், முக்கிய புள்ளிகளும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சரத்குமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி ராதிகாவுடன் வந்து மனுத் தாக்கல் செய்தார்.
வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான்சனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications