குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்ந்த அதிமுக, திமுக வேட்பாளர்கள்: பாதிப்பை ஏற்படுத்திய பாமக,தேமுதிக

Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர். பல வேட்பாளர்கள் 2000, 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தங்களின் வெற்றி வாய்ப்பினை பறிகொடுத்துள்ளனர்.

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையை விட வெறும் 49 வாக்குகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்பதுரை 69,596 ஓட்டுகளும், அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்றனர்.

விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 48,363 வாக்குகள் பெற்றார். 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வியை தழுவினார். இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் 37,363 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தராஜை விட 493 ஓட்டுகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். டாக்டர் கிருஷ்ணசாமி 64,578 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் 65,071 வாக்குகளும் பெற்றனர்.

என்.ஆர்.தனபாலன்

என்.ஆர்.தனபாலன்

பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன் 519 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் இடம் வெற்றியை பறி கொடுத்தார். என்.ஆர்.தனபாலன் 79,455 வாக்குகளும், வெற்றிவேல் 79,974 வாக்குகளும் பெற்றனர்.

திருப்போரூர்

திருப்போரூர்

திருப்போரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் விஸ்வநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கோதண்டபாணியிடம் 950 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். விஸ்வநாதன் 69,265 வாக்குகளும் கோதண்டபாணி 70,215 வாக்குகள் பெற்றனர்.

செய்யூர் தனி தொகுதி

செய்யூர் தனி தொகுதி

செய்யூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முனுசாமி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.அரசுவைவிட 304 ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். ஆர்.டி.அரசு 63,446 ஓட்டுகளும் ஏ.முனுசாமி 63,142 ஓட்டுகளும் பெற்று இருந்தனர்.

கரூர் விஜயபாஸ்கர்

கரூர் விஜயபாஸ்கர்

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுப்பிரமணியன் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கரை விட 441 ஓட்டுகள் குறைவாக பெற்று வெற்றியை இழந்தார். விஜயபாஸ்கர் 81,936 ஓட்டு களும், சுப்பிரமணியன் 81,495 ஓட்டுகளும் பெற்றனர்.

திருமயம் வைரமுத்து

திருமயம் வைரமுத்து

திருமயம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வைரமுத்து தி.மு.க. வேட்பாளர் எஸ்.ரகுபதியை விட 766 ஓட்டுக்கள் குறைவாக பெற்று வெற்றியை இழந்தார். வைரமுத்து 71,607 ஓட்டுகளும், எஸ்.ரகுபதி 72,373 ஓட்டுகளும் பெற்றனர்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை விட 601 ஓட்டுகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 81,761 ஓட்டுகளும், நயினார் நாகேந்திரன் 81,160 ஓட்டுகளும் பெற்றனர்.

திண்டிவனம் திமுக

திண்டிவனம் திமுக

திண்டிவனம் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் தி.மு.க. வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கத்தை விட 101 ஓட்டுகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். சீத்தாபதி சொக்கலிங்கம் 61,879 ஓட்டுகளும், ராஜேந்திரன் 61,778 ஓட்டுகளும் பெற்றனர்.

2000 ஆயிரம் முதல் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாத்தில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்த வேட்பாளர்கள்.

அண்ணாநகர்

அண்ணாநகர்

திமுக எம்.கே.மோகன் 72,207
அதிமுக கோகுல இந்திரா 70,520
பாஜக கே.சுரேஷ் 8,820
மல்லிகா தயாளன் மதிமுக 6,491
அகிலேஷ் பாமக 5691

ஆவடி

ஆவடி

அதிமுக க. பாண்டியராஜன் 1,08,064
திமுக சா.மு.நாசர் 1,06669
கே. அந்திரிதாஸ் மதிமுக 22,846
பாமக ஆனந்தகிருஷ்ணன் 12,428

அரக்கோணம்

அரக்கோணம்

அதிமுக ரவி 68,176
திமுக ராஜ்குமார் 64,015
பாமக அற்புதம் 20,130

ஊத்தங்கரை (தனி)

ஊத்தங்கரை (தனி)

அதிமுக மனோரஞ்சிதம் 69,980
திமுக மாலதி 67,367
பாமக அங்கதி 23,500
விசிக கனியமுதன் 12,669

பர்கூர்

பர்கூர்

அதிமுக ராஜேந்திரன் 80,650
திமுக கோவிந்தராஜன் 79,668
பாமக குமார் 18,407
தமாகா ராஜேந்திரன் 2,948

செய்யார்

செய்யார்

அதிமுக மோகன் 77,766
காங்கிரஸ் டாக்டர் விஷ்ணு பிரசாத் 69,239
பாமக சீனிவாசன் 37,491
தேமுதிக சரவணன் 10,855

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை

அதிமுக குமரகுரு 81,973
திமுக வசந்தவேல் 77,809
தேமுதிக விஜயகாந்த் 34,447
பாமக பாலு 20,233

 கெங்கவல்லி (தனி)

கெங்கவல்லி (தனி)

அதிமுக மருதமுத்து 74, 301
திமுக ரேகா பிரியதர்ஷினி 72,039
பாமக சண்முகவேல் மூர்த்தி 10, 715
தேமுதிக சுபா 7, 114

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம்

அதிமுக சந்திரசேகரன் 91,339
திமுக பொன்னுச்சாமி 79,006
தேமுதிக சந்தியா 5,609

பரமத்தி வேலூர்

பரமத்தி வேலூர்

திமுக மூர்த்தி 74, 418
அதிமுக ராஜேந்திரன் 73,600
தேமுதிக முத்துக்குமார் 6,014
கொமதேக பூபதி 5,116
பாஜக ராஜ்குமார் 4,323

மடத்துக்குளம்

மடத்துக்குளம்

திமுக ஜெயராமகிருஷ்ணன் 76,619
அதிமுக மனோகரன் 74,952
தமாகா மகேஷ்வரி 6,208

பண்ருட்டி

பண்ருட்டி

அதிமுக சத்யா 72,353
திமுக பொன்குமார் 69,225
பாமக தர்மலிங்கம் 18,666
தேமுதிக சிவக்கொழுந்து 18,409

லால்குடி

லால்குடி

திமுக சவுந்தரபாண்டியன் 77,946
அதிமுக விஜயமூர்த்தி 74,109
மா.கம்யூனிஸ்ட் ஜெயசீலன் 6,784

புவனகிரி

புவனகிரி

திமுக சரவணதுரை 60,554
அதிமுக செல்வி ராமஜெயம் 55,066
பாமக அசோக்குமார் 33,681
விசிக சிந்தனை செல்வன் 33,662

சிதம்பரம்

சிதம்பரம்

அதிமுக பாண்டியன் 58,543
திமுக செந்தில்குமார் 57,037
பாமக அருள் 24,226
சிபிஎம் பாலகிருஷ்ணன் 23,314

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர்

தி.மு.க கோவி. செழியன் 77,538
அதிமுக சேட்டு 77,006
பாமக மானதயன் 13, 709
விசிக விவேகானந்தன் 10,622

ஒரத்தநாடு

ஒரத்தநாடு

திமுக ராமச்சந்திரன் 84,378
அதிமுக வைத்திலிங்கம் 80,733
தேமுதிக ராமநாதன் 6351

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

திமுக பெரியண்ணன் அரசு 66,739
அதிமுக கார்த்திக் தொண்டைமான் 64,655
சுயேச்சை சொக்கலிங்கம் 22,973

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

அதிமுக ராதாகிருஷ்ணன் 70,949
திமுக அன்பழகன் 66,171
பாமக ஐயப்பன் 13, 115
தேமுதிக 12,294

சிங்காநல்லூர்

சிங்காநல்லூர்

திமுக கார்த்திக் 75,459
அதிமுக சிங்கமுத்து 70,279
பாஜக நந்தகுமார் 16,605
மதிமுக அர்ஜூனராஜ் 11,035

அரியலூர்

அரியலூர்

அதிமுக ராஜேந்திரன் 88,523
திமுக சிவசங்கர் 86,480
தேமுதிக ஜெயவேல்ரமா 13,599
பாமக திருமாவளவன் 13,529

அறந்தாங்கி

அறந்தாங்கி

அதிமுக ரத்தினசபாபதி 69,905
காங்கிரஸ் ராமச்சந்திரன் 67,614
சிபிஐ லோகநாதன் 6,341

கந்தர்வக்கோட்டை (தனி)

கந்தர்வக்கோட்டை (தனி)

அதிமுக ஆறுமுகம் 64,043
திமுக அன்பரசன் 60,996
சிபிஎம் சின்னதுரை 13,918

ஆலங்குளம்

ஆலங்குளம்

திமுக பூங்கோதை 88,891
அதிமுக ஹெப்சி 84, 137
தேமுதிக ராஜேந்திரபிரசாத் 7,784

திருநெல்வேலி

திருநெல்வேலி

திமுக லட்சுமணன் 81,761
அதிமுக நயினார் நாகேந்திரன் 81,160
தேமுதிக மாடசாமி 8,640

கடையநல்லூர்

கடையநல்லூர்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முகமது அபுபக்கர் 70,763
அதிமுக ஷேக் தாவூத் 69,569
தேமுதிக மாரியப்பன் 15,858
பாஜக கதிர்வேலு 14,286

விருதுநகர்

விருதுநகர்

திமுக சீனிவாசன் 65,499
அதிமுக கலாநிதி 62,629
தேமுதிக காஜா செரீப் 10,127
பாஜக காமாட்சி 7,013

கோவில்பட்டி

கோவில்பட்டி

அதிமுக கடம்பூர் ராஜூ 64,514
திமுக சுப்ரமணியன் 64,086
மதிமுக விநாயகா ரமேஷ் 28,512
நாம்தமிழர் முத்துமாரி 2,070

தென்காசி

தென்காசி

அதிமுக செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339
காங்கிரஸ் பழனி நாடார் 85,877
பாஜக செல்வி 11,716

குன்னூர்

குன்னூர்

அதிமுக ராமு 61,650
திமுக முபாரக் 57,940
தேமுதிக சிதம்பரம் 3,989

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம்

அதிமுக சண்முகநாதன் 65,198
காங்கிரஸ் ராணி வெங்கடேசன் 61,667
பாஜக செல்வராஜ் 9,582

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+