பெருமாளை சேவித்த ஸ்டாலின்.. ஆன்மீகத்திற்குத் தாவும் திமுகவினர்.. 'கம்'மென்றிருக்கும் கருணாநிதி
சென்னை: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு ஸ்டாலின் போனலும் போனார் சமூக வலைத்தளங்களில் போட்டு திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர் வலைஞர்கள். எல்லாம் டிராமா என்கிறது நமது எம்ஜிஆர். ஆனால் அதெல்லாம் இல்லை திமுகவில் இந்துக்கள் அதிகம் இருக்கின்றனர் என்று அறிக்கை விடுகிறார் ஸ்டாலின், இதற்கும் பெரியார் சீடர்கள் பதிலடி தருகிறார்கள்.
அதைவிட முக்கியமான விசயம், ஸ்டாலின் கோவிலுக்குப் போய் பாதை காட்டியதன் விளைவாக திமுகவினர் பலரும் கோவில்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்காக, அப்போது திமுகவில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அதே பாணியில், தற்போது கோவிலுக்கு போகும் திமுகவினரை கட்சியை விட்டு நீக்குவாரா தலைவர் கருணாநிதி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நமது எம்.ஜி.ஆர் கட்டுரை
இந்துக்களை திருடர்கள் என்று கூறி அசிங்கப்படுத்தியதற்கும், ராமபிரானை பற்றி விமர்சனம் செய்ததற்கும், மன்னிப்பு கோர ஸ்டாலினை கோயிலுக்கு அனுப்பி வைத்தாரா கருணாநிதி? கடவுள் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று தந்தை கேட்டதற்கு பதில் கண்டுபிடிக்க கோயிலுக்குள் சென்றாரா? என்று நமது எம்ஜிஆர் கேள்வி எழுப்பியுள்ளது.

ராமர் என்ஜீனியர்
ராமர் பாலத்தை ராமர் கட்டினார் என்று சொன்ன போது, ராமர் என்ன பொறியாளரா? அவர் எந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படித்து சேது பாலத்தை அமைத்தார்? என்று சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்த போது கேள்வி எழுப்பினார்.இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம் எல்லாம் பலிக்காது. அனைத்து மதத்தினருமே திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டனர் என்று நமது எம்ஜிஆர் தெரிவித்துள்ளது.
|
திமுவினர் படையெடுப்பு
இது ஒருபுறம் இருக்க திமுகவினர் பலரும் இப்போது கோவிலுக்கு பகிரங்கமாக படையெடுத்து வருகின்றனர். ஜெ.அன்பழகன் தி.நகரில் உள்ள விநாயகர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதை பகிரங்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
ஜெ.அன்பழகன்
விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஜெ.அன்பழகன், மாலை மரியாதையுடன் கோவிலில் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
ஆற்காடு வீராசாமி
திமுகவின் முன்னாள் பொருளாளரும் திராவிய இயக்க பாரம்பரியத்தில் ஊறியவருமான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு சென்று ஆயுள் ஹோமம் செய்து திரும்பியிருக்கிறார். எல்லாம் ஸ்டாலின் கொடுத்த துணிச்சல்தான் என்கின்றனர்.
|
சர்ச்சை ஸ்டாலின்
என்னதான் ஸ்டாலின் கோவிலுக்குப் போனாலும், ஷூ காலுடன் பூரண கும்பமரியாதையை ஸ்டாலின் ஏற்றுள்ளது சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
|
கருணாநிதியின் மவுனம்
திமுகவில் பெரியாரின் சீடர்கள் நிரம்பியிருக்கின்றனர் என்று கருணாநிதி கூறி வந்த நிலையில் திமுகவில் இந்துக்களே அதிகம் இருக்கின்றனர் என்று ஸ்டாலின் கூறியுள்ளதும் கடுமையான விமர்சனத்தை கிளப்பி வருகிறது, ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ எதற்கும் வாயை திறக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications