பாஜக அதிமுக கூட்டு.. ஆபாச வீடியோ உள்ளதாக கூறி பணம் பறிக்க முயன்ற அதிமுக நிர்வாகியும் தலைமறைவு!
மயிலாடுதுறை: ஆபாச வீடியோவை வெளியிடுவோம் எனக் கூறி தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவருடன் கூட்டு சேர்ந்து பிளாக்மெயில் செய்த அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த புள்ளி ஒருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானமாக இருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ தங்களிடம் உள்ளதாகவும் அதை வெளியிட்டு விடுவோம் என்றும் கூறி சிலர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஆதீனம் ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல்: அந்த புகாரில் ஆடுதுறையை சேர்ந்த வினோத், தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாளராக பணியாற்றும் திருவையாறு செந்தில் என்பவருடன் கூட்டு சேர்ந்து, தன்னிடம் தருமபுரம் ஆதீன கர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ உள்ளதாகவும், தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
மேலும், திருவெண்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவார். அவரிடம் பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால், விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்யக்கூட தயங்க மாட்டோம் என்று மிரட்டியதோடு பலமுறை என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தனர் என்றும், தான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக தெரிவித்ததாகவும் விருத்தகிரி தெரிவித்திருந்தார்.

4 பேர் கைது: மேலும், பின்னர் இதுதொடர்பாக செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் அமுர்த விஜயகுமார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர், தன்னை தொடர்பு கொண்டு தருமபுரம் ஆதீனம் தொடர்பான வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும், ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தொழிலதிபரும், தனியார் பள்ளி தாளாளருமான குடியரசு, ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவர்கள் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாஜக + அதிமுக பிரமுகர்கள்: மேலும், இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், அமிர்த விஜயகுமார், தருமபுரம் ஆதீன பணிவிடையாளர் செந்தில், அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவர்கள் வேறு யாரையும் இதுபோல மிரட்டி பணம் பறித்துள்ளனரா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி தலைமறைவு: ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் புதுச்சேரியில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். இவர்கள் வேறு யாரையும் இதுபோல மிரட்டி பணம் பறித்துள்ளனரா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக அதிமுக கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பே முறிந்துவிட்ட நிலையிலும், பாஜக மாவட்ட தலைவர் அகோரத்துடன் கூட்டு சேர்ந்து அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ஜெயச்சந்திரன், ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டி ஆதீனத்திடம் பணம் பறிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications