ரத்த தானம் செய்வதுபோல நடித்த அதிமுக மா.செ! வீடியோ வைரலான நிலையில் ஜெயசுதா கொடுத்த விளக்கத்தை பாருங்க
திருவண்ணாமலை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமில், ரத்த தானம் கொடுப்பது போல் நடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா. இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவிய நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்தநாளை அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும், பொதுமக்களுக்கு உதவிகள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா ரத்த தானம் செய்வது போல் கையை மட்டும் காண்பித்தபடி இருந்த வீடியோ வெளியானது.
அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா, ரத்த தானம் செய்து ரத்த தான முகாமை தொடங்கி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் வீடியோவுக்காக மட்டும் போஸ் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊசி குத்துவது போல போஸ் மட்டும் கொடுத்த நிலையில், ரத்த தானம் செய்வது போன்ற வீடியோ வெளியான நிலையில் இது சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளானது. இந்நிலையில் இதுதொடர்பாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா கூறுகையில், "ரத்த தானம் செய்வதற்காக தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இதில் ஒன்றும் இல்லை. நான் ரத்த தானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications