அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? 'ஒன்இந்தியா தமிழ்' வாசகர்கள் சாய்ஸ் இதுதான்

ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச்செயலாளர்களாக வேண்டும் என்ற சாய்சுக்கு சமமாக வாக்களித்துள்ளார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக யாருக்கு வாய்ப்பு என்ற கேள்விக்கு 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் வழங்கிய பதிலை கேட்டால் சசிகலாவுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

ஆம்.. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார்.

அதேநேரம், கட்சியின் அதிகாரம்மிக்க பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பதில் பெரும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மக்கள் கருத்தை அறிந்து கொள்ள 'ஓன்இந்தியா தமிழ்' தளம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.

சசிகலா vs ஓபிஎஸ்

சசிகலா vs ஓபிஎஸ்

இதில் கொடுக்கப்பட்ட பெயர்கள் அடிப்படையில் கிடைத்த வாக்குகளில் ஆச்சரிய தகவல் என்னவென்றால், சசிகலா மற்றும், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரே அளவிலான வாக்குகளை பெற்று சமநிலையில் இருப்பதுதான். வெளியுலகில் தன்னை அதிகம் காட்டிக்கொள்ளாத சசிகலாவும், 3வது முறையாக முதல்வராக உள்ள ஓபிஎஸ்சும் சம அளவு மக்கள் ஈர்ப்பை பெற்றுள்ளதை சசிகலா ஆதரவாளர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சரிசமமான வாக்குகள்

சரிசமமான வாக்குகள்

சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் தலா 18.92 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர். அடுத்தபடியாக லோக்சபா துணை சபாநாயகரான அதிமுகவின் தம்பி துரை 14.29 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அடுத்தபடியாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு 3.31 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி

மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி

இந்த பட்டியலில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், 4.53 சதவீத வாக்குகளுடன் எடப்பாடி பழனிச்சாமியைவிடவும் முன்னணியில் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு 0.31 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏற்கவே முடியாது

ஏற்கவே முடியாது

அதேநேரம், இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால், இதில் யாரையுமே அதிமுகவினர் ஏற்கமாட்டார்கள் என கூறி வாக்களித்தவர்கள்தான் அதிகம். 38.95 சதவீத வாசகர்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு இப்போதுள்ள யாருமே மிகவும் தகுதியான நபர்களாக கண்ணில் படவில்லை என்பதை வாசகர்கள் மனநிலை காண்பிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+