அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அப்போது, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி. இளம்வழுதி உடன் இருந்தார்.
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி-2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக் தனது கணவர் ஷேக் அப்துல்காதருடன் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் உடன் இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள், நேரில் சந்தித்து தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என். சின்னத்துரை உடன் இருந்தார்.
தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் கடலூர் இரா. ராஜேந்திரன், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.கே. நரேந்திரன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து தங்களைக் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி
இதேபோல் நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இப்போது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
அதேபோல சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி திமுகவில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார் என்பதற்காக உடனடியாக வெளியேற்றப்பட்டவர். இதனையடுத்து கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
இதனையடுத்து ஜீ தமிழ் சேனல், வசந்த் டிவியில் ரியாலிட்டிஷோவை தொகுத்து வழங்கிவந்த நிர்மலா பெரியசாமி. தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications