மன்மத ஆண்டு.. மகாமகம்.. ராசியில்லாத 6.. டிசம்பரில் தமிழக சட்டசபை தேர்தல்?
சென்னை: தமிழக சட்டசபைக்கு வரும் டிசம்பரிலேயே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு 2016ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் ஆளும் அண்ணா தி.மு.க. அரசோ பல்வேறு காரணங்களை முன்வைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராசியில்லாத 6
அதாவது அண்ணா தி.மு.க.வுக்கும் 6-ம் எண்ணுக்கும் ராசி இல்லையாம்.. கடந்த 1996, 2006 சட்டசபை தேர்தல்களில் அண்ணா தி.மு.க. தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்தது. அதுபோல 2016ஆம் ஆண்டும் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்களாம்..

மன்மத,..துர்முகி
அதேபோல் வரும் 14-ந் தேதி பிறக்கும் தமிழ் வருஷம் 'மன்மத ஆண்டாம்'... அடுத்த ஆண்டு பிறக்க இருப்பது 'துர்'முகி ஆண்டாம்... என்ன இது துர்முகி பேரே சரியில்லையே. என்கிற முனுமுணுப்பும் அ.தி.மு.க. மேலிடத்தில் இருக்கிறதாம்...

மகாமகம்
அப்புறம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம்.. தமிழகத்தில் மகாமகம் என்றாலேயே 1992ல் ஜெயலலிதா- சசிகலா நீராடியது... அதில் மாண்டுபோனவர்கள் நினைவும்தான் வருகிறது.. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகாமக திருவிழா நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக வரும் மகாமகம் திருவிழாவால் தேர்தலின் போது எங்கே 'நெகட்டிவ்' எபெக்ட் வந்துவிடுமோ என்றும் கருதுகிறார்களாம்..

தீர்ப்பு..
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் விரைவில் வர இருக்கிறது...

டிசம்பரில் தேர்தல்?
இதனடிப்படையில் தேர்தலை ஓரிரு மாதங்களில் நடத்துவதா? அல்லது 2016 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்பாக டிசம்பர் மாதமே நடத்துவதா? என தீர்மானிக்கப்பட இருக்கிறதாம்..
வருது..வருது.. தேர்தல்... வருது
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications