மக்களை மதிக்காமல் அவசர ஜல்லிக்கட்டு நடத்த முயன்று கேவலப்பட்டு அவமானப்பட்ட அதிமுகவினர்
மதுரை: அவசர கதியில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பந்தயங்களை நடத்தி முடித்து நல்ல பெயர் பெற முற்பட்ட அதிமுகவினருக்கு கடைசியில் மக்களிடமிருந்து கிடைத்தது அவமானம் மட்டுமே.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தன மத்திய மாநில அரசுகள். ஆனால் மக்கள் போராட்டம் வெடித்த பிறகு அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் ஒரே நாளில் ஒப்புதலும் பெற்றது தமிழக அரசு. இப்படி ஒரு வழி இருப்பது தெரிந்திருந்தும் இத்தனை நாட்களாக தமிழக அரசு ஏன் சும்மா இருந்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது.

இது கோபமாக வெடித்து கிளம்பியது. எங்கள் போராட்டத்தால், அவசர சட்டத்தை உருவாக்கிய நீங்கள், நிரந்தர சட்டம் கொண்டுவாருங்கள். அப்போதுதான் போராட்டத்தைவிட்டு விலகுவோம் என்று கோரசாக அனைத்து நகர போராட்டக்காரர்களும் கூறிவிட்டனர்.
ஆனால் தேதி குறித்தபடி இன்றே ஜல்லிக்கட்டை நடத்தி நற்பெயரை பெறவேண்டும் என்று முனைந்தது அதிமுக. முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி ஒருபக்கம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை மறுபக்கம் என கிரெடிட் வாங்க போட்டா போட்டிகள் நடந்தன .
ஆனால் மக்களோ, நிரந்தர சட்டம் கேட்டு முதல்வரையே பங்கேற்காமல் விரட்டிவிட்டனர்.
அதேநேரம், அதிமுக செய்தி சேனல், டிவிட்டர் ஹேண்டில் போன்றவற்றில் ஜல்லிக்கட்டுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ரன. ரேக்ளாவுக்கு ஆதரவு அளிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. இது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. கோவையில் ரேக்ளா போட்டி நடத்தவிடாமல் இளைஞர்கள் தடுத்துவிட்டனர். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தவிடாமலும் மக்கள் தடுத்துவிட்டனர். கடைசியில் அதிமுகவினருக்கு அவமானமே மிஞ்சியது.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications