எடப்பாடி அணியோடு எப்போது பேசலாம்... ஓபிஎஸ் அவசர ஆலோசனை
சென்னை: அதிமுக இணைப்புக் குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக அணிகள் இணைப்புக் குறித்த பேச்சுவார்த்தையை முதல்வர் எடப்பாடி அணியுடன் எப்போது தொடங்கலாம் என்று முடிவு செய்வது தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன்,கே.பி.முனுசாமி,பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் அணியினர் முட்டுக்கட்டை போடுவதாக நேற்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் புகார் தெரிவித்திருந்தார். இதனால் நேற்றே அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஓபிஎஸ் அணியினர் மாறிமாறி பேசுகிறார்கள்.நாங்கள் அப்படி இல்லை என்றும் ஒன்றுபட்டு செயல்பட தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் எங்கள் தர்ம யுத்தத்தில் வைக்கப்பட்ட,ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்; சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணி நெருக்கடி கொடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்,மாவட்ட செயலாளர்கள் கூடும் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications