சட்டசபை தேர்தல் வெற்றி.. சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று மாலை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் முதன் முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது. திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவிய போதிலும், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
பிற்பகல் 2 மணியளவில், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஸ்பென்சர் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார்.
இதையடுத்து சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை, ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து ஜெயலலிதா அளிப்பார் எனத் தெரிகிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற தேதி தெரிய வரும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications