இந்துத்துவா, திமுக எதிர்ப்புகளில் முரண்பாடு.. நீங்க வைகோவா? இல்ல சைக்கோவா? நமது அம்மா கடும் தாக்கு
மதிமுக பொதுச்செயலர் வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளது நமது அம்மா நாளேடு.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட், பாஜக எதிர்ப்பு, திமுக ஆதரவு நிலைப்பாடுகளை முன்வைத்து மதிமுக பொதுச்செயலர் வைகோவை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.
நமது அம்மா நாளேட்டில் நீங்க வைகோவா இல்ல சைக்கோவா என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள விமர்சனம்:
இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விடக் கூடாது...
இதுவும் நீங்கதான்..
அப்படின்னா 1998-ல் பிஜேபியோடு கூட்டு; 1999-லும் பிஜேபியோடு கூட்டு.. 2014-ல் மோடியை அழைத்துக் கொண்டு முட்டுச் சந்து வரை மைக் பிடித்து மோடி ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் என பிரச்சாரம்...

சரி அடுத்தது... 'உயிரைக் குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எப்படி அனுமதிக்க் முடியும்"....
இதுவும் நீங்கதான்....
அப்படியென்றால் புகைப்பழக்கம் உயிருக்கு கேடு என்று சிகரெட் பொட்டியிலேயே அச்சிட்டிருக்கும்போது அதை மட்டும் எப்படி உங்க மகன் வையாபுரி பெயரிலே ஏஜென்சி எடுத்தீங்க...
அதுமட்டுமல்லாமல் சிகரெட் பிடிப்பவன் கற்பழிக்கமாட்டான்.. சிகரெட் பிடிப்பவன் கையை பிடித்து இழுக்கமாட்டான் என்றெல்லாம் நீங்களே அதற்கு விளம்பரதாரராக மாறினீங்க?
அடுத்தது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக உயிரையும் கொடுப்பேன்...
இதுவும் நீங்கதான்..
அதே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியும் கொடுத்து அந்த ஆலை விரிவாக்கத்துக்காக 230 ஏக்கர் நிலத்தையும் கொடுத்த திமுகவோடும் குறிப்பாக மு.க. ஸ்டாலினின் முதுக்குக்கு பின்னாடி நிக்குறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா?
ஈழத்தில் நடந்த இன அழிப்புக்குக் காரணமான திமுகவை வேரோடு அழிப்பதொன்றே என் லட்சியம் என 2016 வரை ஊரெல்லாம் ஊளையிட்டுப்புட்டு இப்போது திமுகவை ஆட்சியில் அமர்த்துவதுதான் என் குறிக்கோள் என்று பேசி அலையுறீங்களே... உண்மையாகவே நீங்க யாரு?
நேற்றென்ன பேசினோம்.. இன்றென்ன பேசுகிறோம்... நாளை என்ன பேசப் போகிறோம் என்பதே தெரியாமல் குறிக்கோளற்று அலைகிற உங்களின் லட்சியம்தான் என்ன?
இப்படியே போனால் சரித்திரம் உங்களை வைகோ என்பதற்கு பதிலாக சைகோ என்றல்லவா பதிவு செய்யும்.
இவ்வாறு அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications