அம்மா உணவகம், உப்பு பாக்கெட் பழசு.. அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் புதுசு!
சென்னை: அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மெடிக்கல், உப்பு, மினரல் வாட்டர் வரிசையில், ஒருபடி அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அம்மா பெயரில் ரயில்விட வேண்டும் என்று ரயில்வே கமிட்டி கூட்டத்தில், கோரிக்கைவிடுத்துள்ளார் அதிமுக கட்சியின் பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சி.மகேந்திரன்.
சென்னையில் சமீபத்தில் மண்டல ரயில்வே கலந்தாய்வு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மகேந்திரன் பங்கேற்கவில்லை என்றபோதிலும், தனது சார்பில் வழங்கிய புத்தக குறிப்பில், பொள்ளாச்சி முதல் சென்னைக்கு, அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெயரில் புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதை மண்டல ரயில்வே அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், புதிய ரயில் மற்றும் பெயர் சூட்டல் விவகாரங்களை ரயில்வே வாரியம்தான் கையாளுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நடவடிக்கையை கேள்விப்பட்டு, "வரவர, இவர்கள் பாசத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டுள்ளது" என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications