பிடிபட்ட பிரேமா.. லாட்ஜ்களில் விபச்சாரம்.. பொறிவைத்து பிடித்த போலீஸ்.. ஆம்பூர் அதிமுக பிரமுகர் கைது!
விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்
திருப்பத்தூர்: அழகான இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரேமா என்பவரை ஆம்பூர் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். பிரேமா ஒரு அதிமுக பிரமுகராம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நிறைய விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
லாட்ஜ்கள் தவிர, தனி வீடுகள் எடுத்தும் இந்த விபச்சாரம் நடப்பதாகவும், இதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்கிறார்கள் அடுத்தடுத்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

லாட்ஜ்கள்
இதுகுறித்த உடனடியாக உயரதிகாரிகளுக்கு விஷயம் சென்றது... அதனால் ரகசிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், போலீசாரும் விபச்சாரம் நடப்பதாக சொல்லப்பட்ட லாட்ஜ்கள், வீடுகளை ரகசியமாக கண்காணித்தனர்.. அப்போதுதான் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏராளமான இளம்பெண்கள் நடமாட்டத்தை அறிந்தனர்.

பெண் பிரமுகர்
மேலும் இதற்கெல்லாம் காரணம் பிரேமா என்ற பெண் என தெரியவந்தது.. இவர் இதே உமாராபாத் வேப்பமர தெருவை சேர்ந்தர்தான்... 50 வயதாகிறது.. அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி... உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.. இத்தனை பொறுப்புகளை வகித்த பிரேமாதான் இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்த தகவலையும் போலீசார் தங்களது உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இளம்பெண்கள்
அவர்களது உத்தரவுப்படியே பிரேமாவை கைது செய்ய ஆம்பூர் மகளிர் போலீசார் சென்றனர். அப்போது, பெங்களூருவை சேர்ந்த லதா 35, லதாவின் மகள் ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, 3 பேரும் மாறிமாறி சண்டை போட்டுக் கொண்டு வர மறுத்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் பெண் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

புரோக்கர்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரேமாதான் இந்த தொழிலை நடத்தும் புரோக்கர் என்று தெரியவந்தது. மகளிர் ஸ்டேஷனில் பிரேமாவை வைத்து விசாரித்தும் வருகிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து இளம்பெண்களை வரழைத்த பிரேமா, உமாராத் பகுதியில் மட்டுமல்லாது, சுற்றுவட்டார ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் போன்ற பகுதிகளுக்கும் இந்த பெண்களை அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

கைது
எனினும் பிரேமாவிடம் முழு விசாரணை நடந்தால்தான் இது பற்றின உண்மைதன்மை தெரியவரும். விபச்சார புகார் தொடர்பாக பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது உள்ளூர் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட பெண்களில் 17 வயது சிறுமியும் ஒருவர்... அவரை மட்டும் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரேமா உட்பட 2 பேரை வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர். 2 வருஷமாகவே பிரேமா இந்த புரோக்கர் வேலையை செய்து வருகிறாராம்..

ரூ.4 ஆயிரம்
பாலியல் தொழில் செய்யும் சில நபர்களுடன் ஏற்பட்ட பழக்கமும், பணம் சம்பாதிக்கும் வெறியும்தான் பிரேமாவை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்கிறார்கள். இதற்காகவே வீட்டை 2 வருடமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.. பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க. அப்பெண்களை பக்காவாக பேசியே பிரெயின் வாஷ் செய்வாராம் பிரேமா. பிறகு அந்த பெண்கள் மட்டுமல்லாது, அவர்களின் பெண் குழந்தைகளையும் இந்த தொழிலில் தள்ளியுள்ள அவலமும் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒருநாளைக்கு 4,000 ரூபாய் சம்பளம் தந்துள்ளார். இனி பிரேமாவிடம் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் விசாரணைகளில் பல பகீர் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications