ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத், விந்தியா, ஆர்த்தி, செந்தில்: அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, அதிமுக தங்களது கட்சி சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும், தங்களது கட்சி சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்த இருக்கும் நட்சத்திர பேச்சாளர்கள் பற்றிய பட்டியலை வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார செலவுகள் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.

அதன்படி, அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் இன்று தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.
அதில், தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைவிட்டு நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், நடிகைகள் விந்தியா, ஆர்த்தி போன்றோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக நட்சத்திர பேச்சாளர்களின் முழு பட்டியல் விவரமாவது:-
ஜெயலலிதா, மு.தம்பிதுரை, ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.மகாலிங்கம், டாக்டர் பி.வேணுகோபால், ஏ.அன்வர் ராஜா, பி.குமார், எஸ்.ஆர்.விஜயகுமார், விஜிலா சந்த்தியானந்த், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் சம்பத், என்.செல்வராஜ், நடிகர் ராமராஜன், பு.தா.இளங்கோவன், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் முத்துலிங்கம், நடிகர் ஆனந்தராஜ், நடிகர் குண்டுகல்யாணம், நடிகர் செந்தில், நடிகை டி.கே.கலா, நடிகை விந்தியா, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான்.
நடிகர் பொன்னம்பலம், நடிகர் எம்.எஸ்.அருள்மணி, நடிகர் கே.ஆர்.சிங்கமுத்து, நடிகர் வையாபுரி, நடிகர் தியாகு, திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன், நடிகர் ஆர்.சுந்தரராஜன், நடிகர் ஏ.கே.ராஜேந்திரன், நடிகர் அணுமோகன், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், நடிகர் மனோபாலா, நடிகை வென்னிறாடை நிர்மலா, நடிகை ஆர்த்தி, நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications