வைகோ அதிரடி... மதிமுகவில் அதிமுகவின் 'ஸ்லீப்பர் செல்களாக உருமாறியவர்கள் களையெடுப்பு
மதிமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்களாக மாறியவர்களை அக்கட்சி பொதுச்செயலர் வைகோ அதிரடியாக களையெடுத்து வருகிறார்.
சென்னை: மதிமுகவில் அதிமுக அணிகள் ஒன்றின் ஸ்லீப்பர் செல்கள் ஊடுருவியிருப்பதை உறுதி செய்யும் வகையில் அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மதிமுக தலைமை எடுக்கும் முடிவுகள் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியை வைகோ சந்தித்து பேட்டியளித்ததை அக்கட்சி தொண்டர்கள் விமர்சித்தனர்.

ஒட்டன்சத்திரம் பேச்சு
இது மதிமுகவுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனால்தான் ஒட்டன்சத்திரம் திருமணம் நிகழ்ச்சியில் இது பற்றி வைகோ பகிரங்கமாக பேசினார்.

ரகசியம் தெரியும்
அத்திருமண விழாவில் பேசிய வைகோ, தலைமையின் முடிவுகளை விமர்சித்து இணையதளங்களில் எழுதுவோர் அதிமுக அணிகளில் ஒன்றின் மறைமுக ஆதரவாளர்கள் என்கிற ரகசியம் எனக்கு தெரியும். நான் ஒற்றர்களை வைத்து நிர்வகிப்பவன் அல்ல.. செய்திகளைத் தருகிறவர்களை வைத்து நிர்வகிப்பவன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருவர் நீக்கம்
இதையடுத்து மானாமதுரை மருது, திருப்பூர் பழ. கெளதமன் ஆகியோர் இணையத்தில் கட்சி தலைமையை விமர்சித்ததாக கூறி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் வைகோ அறிவித்தார். இதற்கும் மதிமுக தொண்டர்கள் இணையதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
Recommended Video


ஸ்லீப்பர் செல்கள்...
மேலும் வைகோ வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதளங்களில் கட்சியின் முடிவையும் கட்சி நிர்வாகிகளையும் விமர்சிக்கும் பதிவுகளுக்கு லைக் போட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருக்கிறார். மதிமுக நிர்வாகிகளே அதிமுக கோஷ்டி ஒன்றின் ஸ்லீப்பர் செல்களாக உருமாறியதாலே இத்தனை அதிரடிகளையும் வைகோ மேற்கொண்டு வருவது அப்பட்டமாகவே தெரிகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications