துக்க வீட்டிலும் பிரியாணி சாப்பிடும் திமுக.. நட்சத்திர கிரிக்கெட்டால் அதிமுக ஆதரவு நடிகர்கள் கோபம்
சென்னை: நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பிய சன் டிவி, நடுவே திமுக விளம்பரங்களை ஒளிபரப்பியது. இதற்கு திரையுலக அதிமுக ஆதரவு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கம் சன் டிவியோடு ஒப்பந்தம் செய்தபோது, அரசியல் விளம்பரங்கள் இடம்பெற கூடாது என்று என்ற நிபந்தனையை விதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி, திமுக ஆதரவு தொலைக்காட்சியான சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிரிக்கெட் போட்டிக்கு நடுவே மிக அதிக அளவு, திமுக சார்பிலான தேர்தல் விளம்பரங்கள் இடம்பெற்றன.
குறிப்பாக ஜெயலலிதாவை விமர்சனம் செய்யும், சொன்னீங்களா, செஞ்சீங்களா என்ற கேள்வியுடன் இடம் பெற்ற விளம்பரங்கள்தான் அதிகம்.

எதிர்ப்பு தோற்றம்
டிவி சேனலை பார்த்த சாமானிய மக்களுக்கு, திரையுலகம் முழுக்க ஜெயலலிதாவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்படுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக அதிமுக தரப்பு நடிகர்கள் கோபத்தை கக்குகிறார்கள்.

ஒப்பந்தம்
நட்சத்திர கிரிக்கெட் போட்டியை, சன்டிவியில் நேரடியாக ஒளிபரப்ப, 'பேக்கேஜ்' முறையில், நடிகர் சங்கம் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், அரசியல் விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது, என்ற நிபந்தனை, நடிகர் சங்கம் சார்பில் விதிக்கப்படவில்லை.

ஸ்டாலின்
நடிகர் சங்கத்தின் ஒப்பந்த குளறுபடிதான், இந்த நிலைக்கு காரணம் என்று அதிமுக தரப்பு நடிகர்கள் கோபப்படுகிறார்கள். நடிகர் ரித்தீஷ், இதுகுறித்து கூறுகையில், முழுக்க முழுக்க இது, ஸ்டாலின் செய்த சதி, என்றார்.

பிரியாணி
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கூறுகையில் 'துக்க வீட்டில், கூட பிரியாணியை திமுகவினர் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நாளை கூட்டம்
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. அதில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி குறித்த கேள்விகளை தொடுக்க, அதிமுக ஆதரவு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications