ஆர்.கே.நகரில் ஒரு சிக்கல்.. திமுகவிடமிருந்து அதிமுகவுக்குத் தாவத் தயாராகும் ஜாதி வாக்குகள்!
ஆர்.கே. நகரில் திமுகவுக்கு ஆதரவான ஜாதி வாக்குகளை இழுப்பதில் ஆளும் அதிமுக தீவிரமாக இருக்கிறதாம்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக ஆதரவு ஜாதி வாக்குகளை தங்கள் பக்கம் வளைத்துப் போடுவதில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் நாளுக்குநாள் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.கவுக்கான வாக்குகளைப் பிரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறது ஆளும் அதிமுக.
இரட்டை இலை சின்னம் கைக்கு வந்த பிறகு, தமது தலைமைக்கு கிடைத்த சவாலாக ஆர்.கே.நகர் தேர்தலைக் கருதுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கேற்ப, தொகுதி நிலவர அறிக்கையை நாள்தோறும் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து கேட்டு அறிகிறார்.

ஜாதி வாக்குகளுக்கு குறி
இன்னும் ஒருசில நாட்களில் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில், தி.மு.கவுக்கு ஆதரவாக, எதிராக இருக்கும் ஜாதி அமைப்புகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது அதிமுக டீம்.

சசிகலா கோஷ்டி மீது கோபம்
அந்த டீமிடம் பேசிய சமுதாய தலைவர்கள் சிலர், தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தார் சற்குண பாண்டியன். அவர் இறந்தபிறகு, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தைத் தூண்டிவிட்டதில் முக்கிய பங்கு வகித்த சசிகலா கோஷ்டி மீதுள்ள கோபத்தால் தி.மு.கவுக்கு ஓட்டு போட்டு வந்தோம்.

இனி அதிமுகவுக்கே ஓட்டு
2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையைப் போலவே, கடந்த சில மாதங்களாக சசிகலா குடும்பத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நீங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் நடக்கிறது. இனி எங்களுடைய வாக்குகளை தி.மு.கவுக்குக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. உங்கள் தலைமையிலான அ.தி.மு.கவுக்கே நாங்கள் வாக்களிப்போம்' என உறுதிபடக் கூறியுள்ளனராம்.

ஜாதி தலைவர்களுடன் பேச்சு
இதேபோல், தொகுதிக்குள் உள்ள மாற்று சமுதாய மக்களின் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறது அதிமுக டீம். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 53 சதவீதமும் திருப்பரங்குன்றத்தில் 55 சதவீதமும் தஞ்சையில் 54 சதவீத ஓட்டுக்களையும் அ.தி.மு.க பெற்றது. இந்த சதவீதத்தையும்விடவும் அதிக வாக்குகளை ஆர்.கே.நகரில் பெறத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள். இரட்டை இலை கைக்கு வந்த பிறகும் வெற்றி கிடைக்கவில்லையென்றால், தினகரன் எதிர் பிரசாரம் செய்வதற்கு வசதியாகப் போய்விடும்' எனவும் அமைச்சர்கள் கருதுகின்றனர். எனவே, மதுசூதனனை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அமைச்சர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications