ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு- ஆட்சி மன்ற குழு கூடுகிறது
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு நாளை காலை கூடுகிறது.
ஓராண்டுக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிமுக(அம்மா) கட்சியின் வேட்பாளராக தினகரன் போட்டியிட இருக்கிறார்.
திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீ, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டிருக்கும் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
கடந்த முறை போட்டியிட்ட மதுசூதனன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் ஓபிஎஸ் அணியிலேயே கே.பி. முனுசாமி போட்டியிட முயற்சிக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியோ புதியதாக ஒருவரை நிறுத்தலாமா என யோசித்து வருகிறது. இந்த நிலையில் நாளை காலை அதிமுக தலைமையகத்தில் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்குப் பின் அதிமுக வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications