139 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும்: சி-வோட்டர் எக்ஸிட் போல்
சென்னை: அதிமுக கூட்டணி 139 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று சி-வோட்டர் எக்ஸிட் போல் கருத்து கணிப்பு கூறுகிறது.
ஆக்ஸிஸ் இந்தியா மற்றும், நியூஸ் நேஷன் ஆகிய தேர்தலுக்கு பிந்தைய, கருத்து கணிப்புகள், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறிய நிலையில், சி-வோட்டர் முற்றிலும் மாறுபட்ட நிலையை காட்டுகிறது.

சி-வோட்டர் கருத்துக்கணிப்புப்படி, தமிழகத்தில் அதிமுக கூட்டணி 139 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் கூட்டணி, 78 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது.
பிறர் 17 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் இக்கருத்து கணிப்பு கூறுகிறது.
வாக்கு சதவீதம் அடிப்படையில் அதிமுகவுக்கு 39 சதவீதம் வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 3 சதவீத வாக்குகளும், பிறருக்கு 26 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்ரு கூறுகிறது. இந்த கருத்து கணிப்பு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 150 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications