அதிமுக 164 தொகுதிகளில் வெல்லும்- திமுகவுக்கு 66, பிற கட்சிகளுக்கு 4 தொகுதிகள்- புதிய தலைமுறை சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன.
இந்த சர்வே முடிவுகள் இன்று இரவு 7 மணி முதல் வெளியாகிவருகிறது. இந்த கருத்து கணிப்புபடி, அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக 164 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும் என்று இக்கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக 66 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மக்கள் நல கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு மொத்தமே 4 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 38.58% வாக்காளர்களும், திமுகவுக்கு 32.11% வாக்காளர்களும், தேமுதிகவுக்கு 8.55% வாக்காளர்களும், பாமகவுக்கு 4.47% வாக்காளர்களும், நாம் தமிழர் கட்சிக்கு 2.12% வாக்காளர்களும், பாஜகவுக்கு 1.96% வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போர் பிரிந்து கிடப்பதால், அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்பது இந்த கணிப்பின் சாராம்சம்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications