For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. அதிமுக சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு.. பணக்கார மாநில கட்சிகள் இவைதான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள மாநில கட்சி எது தெரியுமா ?

    சென்னை: 2011 மற்றும் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அதிமுக சொத்து மதிப்பு ரூ..88.21 கோடியில் இருந்து, ரூ.224 கோடியாக உயர்ந்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

    5 ஆண்டுகளில் அதிமுகவின் சொத்து மதிப்பு உயர்வு என்பது 155 சதவீத வளர்ச்சி என்கிறது அந்த அமைப்பு.

    அதிமுக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த சொத்துவிவரமாகும்.

    நான் வளர்கிறேனே மம்மி

    நான் வளர்கிறேனே மம்மி

    அதிமுக, சமாஜ்வாதி கட்சி, அனைத்திந்திய பார்வேர்ட் பிளாக், சிவசேனா ஆகிய மாநில கட்சிகளின் சொத்து மதிப்புதான், தொடர்ந்து வளர்ந்து வருவதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசு மேல, காசு வந்து

    காசு மேல, காசு வந்து

    சிவசேனா கட்சியின் சொத்து மதிப்பு ரூ.20.59 கோடியில் இருந்து ரூ.39.568 கோடியாக உயர்ந்துள்ளது. இது 92% வளர்ச்சியாகும். 2011-12ம் காலகட்டத்தில் பெரும்பாலான மாநில கட்சிகள், தங்களது அதிகப்படியான சொத்து வருமானமாக டெபாசிட் தொகைகளை காண்பித்துள்ளனர். இக்கட்சிகளுக்கு சுமார் ரூ.331.54 கோடி (68.77%) சதவீதம் டெபாசிட்டுகள் வழியாக வந்துள்ளது. இதே டெபாசிட் தொகை 2015-16ல் 1054.80 கோடிகளாக உயர்ந்துள்ளது (மொத்த சொத்தில் 80.19%).

    கொஞ்சமாக உயர்வு

    கொஞ்சமாக உயர்வு

    2011-12ல் 20 மாநில கட்சிகள் அறிவித்த சொத்துக்களின் சராசரி மதிப்பு ரூ.24.11 கோடியாகும். இது 2015-16ல் ரூ.65.77 கோடியாக இருந்தது. 2012-13ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்த சராசரி சொத்து மதிப்பு, ரூ.1.165 கோடியாகும். இவ்விரு கட்சிகளின் சராசரி சொத்து மதிப்பு 2015-16ல் ரூ.3.765 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடன் தொகை

    கடன் தொகை

    சமாஜ்வாதி கட்சியின் அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு 2011-12ல் ரூ.212.86 கோடியாக இருந்தது. இது 198 சதவீத வளர்ச்சி பெற்று, 2015-16ல் 634.96 கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், மாநில கட்சிகள் கடனும் வாங்கியுள்ளன. அதுகுறித்த தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

    திமுக கடன்

    திமுக கடன்

    2011-12ல் சிவசேனா கட்சி தங்களுக்கு ரூ.16.594 கோடி கடன் இருந்ததாக குறிப்பிட்டது. திமுக தங்களுக்கு ரூ.9.214 கடன் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. தெலுங்கானா ராஷ்டிர சமித்தி கட்சி 2015-16ல் அதிகபட்சமாக ரூ.15.97 கோடி கடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 2013-14க்கு நடுவே சிவசேனா கடன் 99.78 சதவீதம் குறைந்தது. ஆனால், தெலுங்கானா ராஷ்டிர சமித்தி கட்சி கடன் அளவு 259 சதவீதம் அதிகரித்திருந்தது.

    English summary
    The assets of AIADMK increased from Rs 88.21 crore to Rs 224 crore between the financial years 2011 and 2016. The asset increase recorded in these years was at 155 per cent states a report by the Association for Democratic Reforms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X